கிரிக்கெட்

கொல்கத்தாவை ஊதி தள்ளியது மும்பை: ‘இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது’ கேப்டன் ரோகித் சர்மா கருத்து + "||" + 'Ishon Kishan's game breakthrough' Captain Roghit Sharma commented

கொல்கத்தாவை ஊதி தள்ளியது மும்பை: ‘இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது’ கேப்டன் ரோகித் சர்மா கருத்து

கொல்கத்தாவை ஊதி தள்ளியது மும்பை: ‘இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது’ கேப்டன் ரோகித் சர்மா கருத்து
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவி

கொல்கத்தா, 

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

மும்பை அபார வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 41–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியது. ஐ.பி.எல். போட்டி தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி தொடர்ச்சியாக பெற்ற 8–வது வெற்றி இதுவாகும். நடப்பு சீசனில் ரன் வித்தியாசத்தில் ஒரு அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கி‌ஷன் 62 ரன்னும் (21 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன்), சூர்யகுமார் யாதவ் 36 ரன்னும் (32 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் ரோகித் சர்மா 36 ரன்னும் (31 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, டாம் குர்ரன், சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இஷான் கி‌ஷன் ஆட்டம் திருப்புமுனை

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 108 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி மோசமான தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 21 ரன்னும், நிதிஷ் ராணா 21 ரன்னும், டாம் குர்ரன் 18 ரன்னும், ராபின் உத்தப்பா 14 ரன்னும், பியுஷ் சாவ்லா 11 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். மும்பை அணி தரப்பில் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, மயங் மார்கண்டே, பென் கட்டிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணி வீரர் இஷான் கி‌ஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘ஒரு அணியாக நாங்கள் மே மாதத்தில் முன்னேறி வருகிறோம். போட்டியின் தொடக்க கட்டம் முதலே ஒருங்கிணைந்த சிறந்த அணியாக நாங்கள் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கடந்த 3 ஆண்டுகளும் நாங்கள் இதுபோல் தான் முதலில் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருந்து பிறகு முன்னேறினோம். எல்லா நேரமும் இதுபோல் சரியான தருணத்தில் சிறந்த நிலையை எட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இஷான் கி‌ஷன் அச்சமின்றி அடித்து ஆடினார். அவரது ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. பந்து பேட்டுக்கு வேகமாக வராத நிலையிலும் அவர் அடித்து ஆடிய விதம் எளிதான காரியம் அல்ல. அவர் ஆட்ட உத்வேகத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றினார். கடைசி 10 ஓவர்களில் எல்லா பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி கட்டத்தில் களம் கண்ட பென் கட்டிங் அதிரடியாக ஆடினார். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.

சரியாக பேட்டிங் செய்யவில்லை

தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், ‘200 ரன்களுக்கு மேலான ரன்கள் என்பது எப்பொழுதும் கடினமான இலக்காகும். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் தவறவிட்ட சில கேட்ச்களை சரியாக பிடித்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது யாருக்கு தெரியும். பவர்பிளேயில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்து விட்டு இலக்கை எட்டிப்பிடிப்பது என்பது கடினம். எங்களுக்கு எதிராக சிறப்பான சாதனையை படைத்து இருக்கும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டோம். எங்களது ஆட்டதிறனை உயர்த்துவதுடன், நம்பிக்கையையும் லேசாக அதிகரிக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற தோல்வி வீரர்களின் நம்பிக்கையை குலைக்கும். ஒரு கேப்டனாக வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது முக்கியம். அத்துடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்றார்.

கொல்கத்தா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்

‘விளையாட்டு என்பது முழு உத்வேகத்துடன் கடைசி வரை களத்தில் போராடுவதாகும். வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் இந்த ஆட்டத்தில் (மும்பைக்கு எதிரான) கொல்கத்தா அணி வீரர்கள் போதிய உத்வேகத்துடன் ஆடாததற்காக அணியின் உரிமையாளர் என்ற முறையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.