கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு + "||" + CSK win the toss and choose to bat first

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. #RRvCSK


ஜெய்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கும் 42–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2–வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும். 

இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் பிளே–ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும். 
10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும். தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புதுதெம்பு அடைந்துள்ளது. 

சொந்த ஊரில் களம் காண்பது ராஜஸ்தானுக்கு இன்னொரு சாதகமான அம்சம் என்ற நிலையில் இன்றை போட்டி தொடங்கி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து விளையாடுகிறது.