கிரிக்கெட்

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + Chennai Super Kings scored 177 for the IPL

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது. #IPL2018
ஜெய்ப்பூர்:

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தது. இந்நிலையில் 12-வது ஓவரில் வாட்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ரெய்னாவும் 52 ரன்களில் சோதி சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய தோனி , பில்லிங்ஸ் கூட்டணி இறுதி கட்டத்தில் எடுத்த முயற்சியால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு  176 ரன்கள் எடுத்தது.  ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா 2 விக்கெட் எடுத்தார். இதனிடையே 177  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...