கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + "||" + In IPL cricket Today's matches

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
இடம்: இந்தூர், நேரம்: மாலை 4 மணிஅஸ்வின் கே

கிங்ஸ் லெவன் பஞ்சாப்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: இந்தூர், நேரம்: மாலை 4 மணி

அஸ்வின் கேப்டன் தினேஷ் கார்த்திக்

நட்சத்திர வீரர்கள்

லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, முஜீப் ரகுமான்

--–

சுனில் நரின், கிறிஸ் லின், உத்தப்பா, சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்செல்

--–

வெற்றி 8 இதுவரை நேருக்கு நேர் 22 வெற்றி 14

எழுச்சி பெறுமா கொல்கத்தா அணி?

இந்த சீசனில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி முதல் 6 ஆட்டங்களில் 5–ல் வெற்றி பெற்றது. அதன் பிறகு திடீரென தள்ளாடிய பஞ்சாப் அணி கடைசி 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் (7 ஆட்டத்தில் 311 ரன்), லோகேஷ் ராகுல் (10 ஆட்டத்தில் 471 ரன்) அருமையான தொடக்கம் ஏற்படுத்தி தந்த போதிலும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி விடுகிறார்கள். இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 7 ஆட்டங்களில 64 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய யுவராஜ்சிங் கடந்த சில ஆட்டங்களில் ஒதுக்கிவைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இறக்கப்பட்ட மனோஜ் திவாரியும் சோபிக்கவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் யுவராஜ்சிங் களம் காண வாய்ப்புள்ளது.

கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி என்று 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால் அந்த அணிக்கு இது வாழ்வா? சாவா? ஆட்டமாகும். நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் ஏனோ கொல்கத்தா அணியின் ஆட்டம் சரியாக ‘கிளிக்’ ஆகவில்லை. அதுவும் கடந்த இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து மும்பை இந்தியன்சிடம் தோற்றதும், அதில் ஒரு ஆட்டத்தில் 102 ரன்களில் சுருண்டதும் அந்த அணியின் மனஉறுதியை சீர்குலைத்து உள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. அதற்கு பதிலடி கொடுத்து, சரிவில் இருந்து கொல்கத்தா அணி எழுச்சி பெறுமா? என்பதே கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்துள்ள 7 ஐ.பி.எல். ஆட்டங்களிலும் 2–வது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

--–

டெல்லி டேர்டெவில்ஸ்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் விராட் கோலி

நட்சத்திர வீரர்கள்

ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், பிரித்வி ஷா, விஜய் சங்கர், டிரென்ட் பவுல்ட்

--–

டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், குயின்டான் டி காக், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்

இதுவரை நேருக்கு நேர் 20 (டை 1, முடிவில்லை 1)

6 வெற்றி 12 வெற்றி

--–

பெங்களூரு அணியை பழிதீர்க்குமா டெல்லி?

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3–ல் வெற்றியும், 7–ல் தோல்வியும் சந்தித்து புள்ளி பட்டியலில் 7–வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அதுவும் நல்ல ரன்ரேட்டை பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் மூட்டையை கட்ட வேண்டியது தான். கடந்த ஆண்டை போலவே திணறிக்கொண்டிருக்கும் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசைக்கு இதுவரை 5 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் நிலையான பலன் கிடைக்கவில்லை. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் (7 ஆட்டத்தில் 4 விக்கெட்) பங்களிப்பும் அந்த அணிக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி (396 ரன்), டிவில்லியர்ஸ் (286 ரன்) ஆகியோரை மட்டுமே அந்த அணி முழுமையாக சார்ந்து இருக்கிறது.

புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள டெல்லி அணி (3 வெற்றி, 8 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷாப் பான்டுவின் சதத்தின் உதவியுடன் 187 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது. என்றாலும் முடிந்த வரை புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண டெல்லி அணி முயற்சிக்கும். இனி டெல்லி அணிக்கு கிடைக்கும் வெற்றிகள் எதிரணியின் அடுத்த சுற்று வாய்ப்பை பாழ்படுத்தும் வகையில் அமையும். ஏற்கனவே பெங்களூருவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருக்கும் டெல்லி அணி தங்களது சொந்த ஊரில் பழிதீர்க்க தீவிர முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)