கிரிக்கெட்

பிரீத்தி ஜிந்தா-ஷேவாக் வாக்குவாதம் + "||" + Preity Zinta-Sehwag's argument

பிரீத்தி ஜிந்தா-ஷேவாக் வாக்குவாதம்

பிரீத்தி ஜிந்தா-ஷேவாக் வாக்குவாதம்
ஐ.பி.எல். கிரிக்கெட்தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
ஜெய்ப்பூர், 

ஐ.பி.எல். கிரிக்கெட்தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் 3-வது வீரராக களம் இறங்கி டக்-அவுட் ஆனார். ஆட்டம் முடிந்ததும் ஆர்.அஸ்வின் முன்கூட்டியே களம் இறக்கப்பட்டது குறித்து பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக், அணியின் இணை உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கருண் நாயர், மனோஜ்திவாரி போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அஸ்வினை முன்கூட்டியே இறக்கியது தவறான யுக்தி என்று பிரீத்தி ஜிந்தா ஆவேசமாக ஷேவாக்கிடம் பேசியதாக தெரிகிறது. ஷேவாக் தனது தரப்பு விளக்கத்தை அளித்தாலும் பிரீத்தி ஜிந்தா திருப்தி அடையவில்லை. அதேசமயம் பிரீத்தி ஜிந்தாவின் நடவடிக்கையால் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் ஷேவாக் இந்த சீசனுடன், பஞ்சாப் அணியுடனான தனது 5 ஆண்டு கால உறவை முறித்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.