கிரிக்கெட்

கூலான கேப்டன் தோனி, பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி அப்ரிடி கூறுகிறார் + "||" + MS Dhoni coolest captain in the world: Shahid Afridi

கூலான கேப்டன் தோனி, பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி அப்ரிடி கூறுகிறார்

கூலான கேப்டன் தோனி, பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி அப்ரிடி கூறுகிறார்
உலகிலேயே கூலான கிரிக்கெட் கேப்டன் தோனி தான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறி உள்ளார்.
நெருக்கடியான சூழல்களில் பதற்றமோ கோபமோ படாமல், வீரர்களை ஊக்கப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தும் தோனி, கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். களத்தில் தோனியின் அணுகுமுறையையும் அவரது கூலான நடவடிக்கைகளையும் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு வீரர்களும் புகழ்ந்துள்ளனர்.

இந்தியாவிற்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் தோனி. கூல் கேப்டன் என்றால் தோனியைத் தவிர வேறு பெயர் யாருக்குமே நினைவுக்கு வராது.

அந்தவகையில், அப்ரிடியும் கூலான கேப்டன் யார் என்ற கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் சட்டென தோனி என பதிலளித்துள்ளார். கனடாவின் டொரண்டோ நகரில் தனது கிரிக்கெட் கிளப்பை தொடங்கிய அப்ரிடி, ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வகையிலான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது, உலகிலேயே கூலான கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனி என்றும், அவருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு கோலி என்றும் பதிலளித்தார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு முனையில் நீங்கள் இருக்கிறீர்கள்; எதிர்முனையில் யார் ஆட வேண்டும் என்று விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு ”அப்துல் ரஸாக்” என்று பதிலளித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
2. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
3. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
4. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat
5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு
பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.