கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's match

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7–வது இடம் வகிக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: இந்தூர், நேரம்: இரவு 8 மணி

அஸ்வின் கேப்டன் விராட் கோலி

நட்சத்திர வீரர்கள்

லோகேஷ் ராகுல், கெய்ல், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, ஆரோன் பிஞ்ச்

டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மன்தீப்சிங் உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்

இதுவரை நேருக்கு நேர் 21

வெற்றி 12 வெற்றி 9

பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7–வது இடம் வகிக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். பெங்களூரு அணியில் இதுவரை 6 வீரர்களை தொடக்க வரிசைக்கு பயன்படுத்தி பார்த்தாகி விட்டது. ஆனாலும் எதுவும் சரியாக ‘கிளிக்’ ஆகவில்லை. இப்போதைக்கு கேப்டன் விராட் கோலி (4 அரைசதத்துடன் 466 ரன்), டிவில்லியர்ஸ் (4 அரைசதத்துடன் (358 ரன்) ஆகியோரை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. இவர்கள் ரன்குவிக்க தவறினால் பெங்களூரு அணியின் நிலைமை சிக்கலாகி விடும். முந்தைய ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 182 ரன்களை ‘சேசிங்’ செய்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களம் இறங்கும்.

தொடக்கத்தில் ‘கொடிகட்டி’ பறந்த பஞ்சாப் அணி இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4–ல் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது 2–ல் வெற்றி பெற்றாக வேண்டும். லோகேஷ் ராகுல் (5 அரைசதத்துடன் 537 ரன்), கிறிஸ் கெய்ல் (332 ரன்) தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. இதே போல் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினின் பந்து வீச்சு எடுபடாததும் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் 11 ஆட்டங்களில் 6 விக்கெட் மட்டுமே (ஓவருக்கு சராசரியாக 8.13 ரன் விட்டுக்கொடுத்துள்ளார்) கைப்பற்றி இருக்கிறார்.

மொத்தத்தில் முக்கியமான மோதல் என்பதால் இரு அணிகளுமே வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானம் சிறியது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கமாக இருக்கக்கூடியது. அதனால் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம். இதே மைதானத்தில் தான் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்)