கிரிக்கெட்

ஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு + "||" + Royal Challengers Bangalore won the toss and opt to bowl

ஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் போட்டியின் 48வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL
இந்தூர்,

ஐபிஎல் போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பெற முடியும். அதே போல் தொடக்கத்தில் கொடிகட்டி பறந்த பஞ்சாப் அணி, கடைசி  5 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேற திணறிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இரு அணிகள் மோதும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.