கிரிக்கெட்

ஐ.பி.எல்.கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தோ்வு + "||" + Kolkata Knight Riders won the toss and chose to bowl

ஐ.பி.எல்.கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தோ்வு

ஐ.பி.எல்.கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தோ்வு
ஐ.பி.எல்.கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தோ்வு செய்துள்ளது. #IPL2018
கொல்கத்தா,

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றனா். 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் பின் வரிசையில் உள்ள அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு போகக்கூடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எண்ணப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு ஆட்டமாக நடக்கிறது. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றியை தக்கவைத்த வண்ணம் உள்ளனா். இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ்கார்த்திக் முதலில் பந்து வீச்சை தோ்வு செய்து விளையாடி வருகின்றன.