கிரிக்கெட்

குல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம் + "||" + Kolkata Knight Riders need 143 runs to win

குல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம்

குல்தீப் யாதவின் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயம்
ஐ.பி.எல்.கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் சுழல் பந்தால் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயம் செய்தது ராஜஸ்தான் அணி. #IPL2018
கொல்கத்தா,

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 49வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு ஆட்டமாக நடந்து வருகிறது. ஐதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதில் இந்த இருஅணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில் “டாஸ்” வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ்கார்த்திக் முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னா் களம் கண்ட ராஜஸ்தான் அணி தொடக்க வீரா்கள் ஆரம்பத்தில் நிலைத்து ஆடினர். பின்னர் ராகுல் திரிபாதி (27) திடீர் என்று ரசுல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினா். பின்னர் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ரஹானே. 

பின்னர் பட்லரும் 38 (19 பந்துகள்) கேப்டன் ரஹானேவும் 11 (12 பந்துகள்) அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்தில் பெவிலியின் திரும்பினா். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனா். இவர்களை தொடர்ந்து சாம்சனும் ஸ்டோக்சும் களம் கண்டனர். இருவரும் ஜோடி சோ்வதற்கு முன்பே நரேன் சாம்சன்னை 12 (10 பந்துகள்) ரன்களில் வீழ்த்தினார்.

இதை தொடா்ந்து வந்த வீரா்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினா். இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனா். ஆனால் ஜெயதேவ் யூனாட் மட்டும் கடைசி தருவாயில் அணியின் ரன்னை உயர்த்த போராடி வந்தார். பின்னா் அவரும் 19 ஓவரின் கடைசியில் 26 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார்.

கொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ் தன்னுடைய ஆபார பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளையும், ரசுல் மற்றும் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டும், பின்னர் மாவி, நரேன், ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்நிலையில் ராஜஸ்தான் அணி ஒதுக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 142 ரன்களை சேர்த்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...