கிரிக்கெட்

தேர்வு குழு உறுப்பினர் பதவி: மார்க்வாக் விலகல் + "||" + Selection Committee Member Selection: Marquee Discharge

தேர்வு குழு உறுப்பினர் பதவி: மார்க்வாக் விலகல்

தேர்வு குழு உறுப்பினர் பதவி: மார்க்வாக் விலகல்
தேர்வு குழு உறுப்பினர் பதவியிலிருந்து மார்க்வாக் விலகினார்.
ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மார்க் வாக் 2014-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். மார்க் வாக்கின் தேர்வாளர் பதவி காலம் ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தேர்வாளர் பதவியில் இருந்து விலகுவதாக மார்க் வாக் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அளித்து உள்ளார். டெலிவிஷன் வர்ணனையாளர் பணியில் இணைய இருப்பதால் அவர் தேர்வாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இருப்பினும் அவர் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி தேர்வில் தேர்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிகிறது. மார்க் வாக்குக்கு பதிலாக புதிய தேர்வாளராக யார்? நியமிக்கப்படுவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...