கிரிக்கெட்

பெங்களூரு அணியின் வெற்றி தொடருமா? + "||" + Will the Bengal team win?

பெங்களூரு அணியின் வெற்றி தொடருமா?

பெங்களூரு அணியின் வெற்றி தொடருமா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு,

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வி என்று இதுவரை 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் டெல்லிக்கு எதிராக 182 ரன்களை சேசிங் செய்தும், பஞ்சாப்பை 88 ரன்களில் சுருட்டியும் பெற்ற வெற்றிகள் பெங்களூரு அணிக்கு புது தெம்பை அளித்துள்ளது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றியுடன் நல்ல ரன்ரேட்டும் வைத்திருந்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். கேப்டன் விராட் கோலி (514 ரன்), டிவில்லியர்ஸ் (358 ரன்) ஆகியோருடன் தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேலும் (4 ஆட்டத்தில் 119 ரன்) சில ஆட்டங்களில் நன்றாக ஆடியிருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கை அதிகப்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ் (17 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்) கைகொடுக்கிறார்கள். போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானது. ‘டாஸ்’ ஜெயித்தால் பெங்களூரு அணி 2-வது பேட்டிங் செய்வதையே விரும்பும்.


ஐதராபாத் அணியை பொறுத்தவரை ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அதனால் இதில் தோற்றாலும் பாதிப்பு எதுவும் கிடையாது. ஆனாலும் 9 வெற்றி, 3 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அந்த அணி, முதலிட அரியணையை வலுப்படுத்த முயற்சிக்கும். பேட்டிங்கில் கேப்டன் கனே வில்லியம்சன் (544 ரன்), ஷிகர் தவான் (369 ரன்), பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) ரஷித்கான் (13 விக்கெட்), ஓவருக்கு சராசரியாக 5.83 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள சந்தீப் ‌ஷர்மா (8 விக்கெட்), சித்தார்த் கவுல் (13 விக்கெட்) ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனம் அருகே விபத்து: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.
2. புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.
3. சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலி - திருப்பூரில் பரிதாபம்
சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
4. புரோ கபடி: குஜராத்-பெங்களூரு ஆட்டம் ‘டை’
புரோ கபடியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது.
5. பெண் துன்புறுத்தல் விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 9 பேர் காயம்
பெண் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.