கிரிக்கெட்

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ் + "||" + The Delhi daredevils fizxed Mumbai Indians' target of 175 runs

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
ஐபிஎல் போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL
புதுடெல்லி,

ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகளில் கடைசி நாளான இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை வலுபடுத்தினால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கலாம் என்னும் முனைப்பில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இதனால் மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் களமிறங்கினர். டெல்லி அணி 30 ரன்கள் எடுத்திருந்த 
நிலையில் பிரித்வி ஷா (12 ரன்கள்) ரன் அவுட் ஆக, மேக்ஸ்வெல்லும் (22 ரன்கள்) பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி நடையை கட்டினார். பின்னர் கேப்டன் 
ஸ்ரேயாஷ் ஐயருடன் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 75 ஆக இருக்கும் போது ஸ்ரேயாஷ் ஐயர் (6 ரன்கள்) மார்கண்டே பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ரிஷாப் பாண்டேவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார்.

இருவரும் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்நிலையில் அற்புதமாக விளையாடி வந்த ரிஷாப் பாண்ட் (64 ரன்கள்) 16.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 139-ஆக இருக்க குர்ணால் பாண்டியா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் அபிஷேக் சர்மா, விஜய் சங்கருடன் சேர இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 174 ரன்களை சேர்த்தனர். மும்பை அணியின் தரப்பில் பும்ரா, மார்கண்டே மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

இதன் மூலம் டெல்லி அணி, மும்பை அணி வெற்றி பெற 175 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.