கிரிக்கெட்

மும்பை அணி வெளியேறியது மகிழ்ச்சி பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேச்சு + "||" + Punjab team owner Preity Zinta talks

மும்பை அணி வெளியேறியது மகிழ்ச்சி பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேச்சு

மும்பை அணி வெளியேறியது மகிழ்ச்சி பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேச்சு
மும்பை அணி வெளியேறியது மகிழ்ச்சி பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேச்சு
புனே, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மூன்று முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி தெரிவித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியில் அவர் பஞ்சாப் அணியின் உதவியாளர் ஒருவருடன் பேசுகிறார். அவர் பேசும் சத்தம் கேட்காவிட்டாலும், ‘மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் நடையை கட்டியது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அவர் பேசுவது தெளிவாக உணர முடிகிறது.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் பஞ்சாப் அணியும் லீக் சுற்றுடன் துரத்தப்பட்டதால் பிரீத்தி ஜிந்தா சோர்ந்து போனார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான கடைசி லீக்கில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. கடைசி ஆட்டம் வரை போராடி வெளியேறுவது எப்போதுமே கடினமான ஒன்று. அடுத்த ஆண்டில் இன்னும் வலிமையான அணியாக மீண்டு வருவோம். பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற 4 அணிகளுக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.