கிரிக்கெட்

பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி + "||" + Women's 20th ODI Cricket Match: Super Neva team wins the last ball

பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி

பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக பெண்கள் அணிக்கான காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் நடந்தது.

மும்பை, 

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக பெண்கள் அணிக்கான காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான ஐ.பி.எல். சூப்பர் நோவாஸ் அணியும், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ஐ.பி.எல். டிரையல்பிளாசர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளிலும் வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பிடித்திருந்தனர். முதலில் பேட் செய்த டிரையல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 32 ரன்களும், கேப்டன் மந்தனா 12 ரன்களும் எடுத்தனர்.

எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சூப்பர் நோவாஸ் அணிக்கு மிதாலிராஜ் (22 ரன்), டேனியலி வியட் (24 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் தந்த போதிலும் அடுத்த வந்த வீராங்கனைகள் தடுமாறினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் சூப்பர் நோவாஸ் அணியின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய சுசி பேட்ஸ் முதல் 5 பந்துகளில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் வெற்றிக்குரிய ஒரு ரன்னை எடுத்து சூப்பர் நோவாஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.