கிரிக்கெட்

முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட் + "||" + Stokes fit and ready to fire for England, says Root

முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்

முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்
ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதியுடன் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும் என கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். #BenStokes

இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து வரும் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி லார்ட்சில் இன்று தொடங்கி 28ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த வருட தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.  இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் 10 ஓவர்களே ஸ்டோக்ஸ் வீசினார்.

அவருக்கு ஏற்பட்ட முதுகுவலியால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.  கடந்த செப்டம்பரில் பிரிஸ்டலில் ஏற்பட்ட சச்சரவில் சிக்கி குற்றச்சாட்டுக்கு ஆளாகி போலீசாரால் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார்.  அதன்பின் சொந்த ஊரில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோ ரூட் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முழு உடல் தகுதியுடன் அவர் அணிக்கு திரும்பி உள்ளது ஊக்கம் தரும் வகையில் இருக்கும்.

அவரது சிறந்த முறையிலான பந்துவீச்சு தாக்குதல் ஆட்டத்திற்கு வலு சேர்க்கும்.  வேறுபட்ட பரிணாமம் தரும் பந்துவீச்சானது ஒரு கேப்டனாக எனக்கும் மற்றும் எங்கள் அணிக்கும் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.

போட்டி ஒன்றிற்கு எவ்வாறு தயாராவது என்பது பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.  அவர் அணியில் விளையாடும்பொழுது இங்கிலாந்திற்காக முழு திறமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவார் என்றும் கூறினார்.

தொடர்ந்து வருகிற ஜூன் 1ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நடைபெறும்.