கிரிக்கெட்

‘கொல்கத்தா ஆடுகளத்தில் ஐதராபாத் அணி சாதிப்பது கடினம்’– குல்தீப் யாதவ் + "||" + 'Kolkata on the pitch Hyderabad team is hard to reach Kuldeep Yadav

‘கொல்கத்தா ஆடுகளத்தில் ஐதராபாத் அணி சாதிப்பது கடினம்’– குல்தீப் யாதவ்

‘கொல்கத்தா ஆடுகளத்தில் ஐதராபாத் அணி சாதிப்பது கடினம்’– குல்தீப் யாதவ்
முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து (கொல்கத்தா) இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும்.

கொல்கத்தா, 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து (கொல்கத்தா) இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும். மும்பை ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது. ஆனால் கொல்கத்தா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். இது எங்களது சொந்த ஊர் மைதானம் என்பதால், இங்கு விளையாடுவது எங்களுக்கு சாதகமான ஒன்று. அவர்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறார்கள் அல்லது நாங்கள் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதெல்லாமல் ஒரு வி‌ஷயமே அல்ல. 2–வது தகுதி சுற்றில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோள் ஆகும்.

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

இந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக இதுவரை 6 ஆட்டங்களில் மோதியுள்ள ஐதராபாத் அணி அதில் ஒன்றில் வெற்றியும், 5–ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.