கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியின் போது காயம்: கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகல் + "||" + The teams. Injury during competition: From county cricket Virat Kohli distortion

ஐ.பி.எல். போட்டியின் போது காயம்: கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகல்

ஐ.பி.எல். போட்டியின் போது காயம்: கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகல்
ஐ.பி.எல். போட்டியின் போது காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். போட்டியின் போது காயமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி காயம்

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு தன்னை நன்கு தயார்படுத்தும் வகையில் அங்குள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இந்திய கேப்டன் 29 வயதான விராட் கோலி முடிவு செய்தார். சுர்ரே கவுண்டி அணிக்காக ஒப்பந்தம் ஆகியிருந்த விராட் கோலி ஒரு மாத காலம் ஆட திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் போது, அவர் கழுத்தில் காயமடைந்திருந்த வி‌ஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. கவுண்டி போட்டியில் விளையாடினால் அதன் மூலம் காயத்தன்மை அதிகமாகி இங்கிலாந்து தொடரில் ஆட முடியாமல் போகக்கூடும் என்று அவரை டாக்டர்கள் எச்சரித்தனர். இதையடுத்து கவுண்டி போட்டியில் விளையாடும் முடிவை அவர் கைவிட்டு இருக்கிறார். இன்னும் மூன்று வாரங்கள் அவர் எந்த பயிற்சியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருப்பார்.

உடல்தகுதி சோதனை

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்– ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இடையே பெங்களூருவில் நடந்த லீக் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜூன் மாதம் சுர்ரே கவுண்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அந்த கவுண்டி போட்டியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவினர் மற்றும் சிறப்பு நிபுணர் மூலம் ஸ்கேன் எடுத்து காயத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15–ந்தேதியில் இருந்து பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் உடல்தகுதியை எட்டுவதற்கான பயிற்சி முறைகளை அவர் மேற்கொள்வார். அயர்லாந்து தொடருக்கு முன்பாக அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்குள் கோலி முழு உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.