கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்:இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது + "||" + Test against Pakistan: England 184 all out on the run

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்:இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்:இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

லண்டன், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இடைவிடாது தொடர்ச்சியாக 153-வது டெஸ்டில் ஆடும் அலஸ்டயர் குக் இதன் மூலம் தொடர்ந்து அதிக டெஸ்டுகளில் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆலன்பார்டரின் சாதனையை சமன் செய்தார்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை, பாகிஸ்தான் பவுலர்கள் திணறடித்தனர். இதனால் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58.2 ஓவர்களில் 184 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலஸ்டயர் குக் 70 ரன்களும் (148 பந்து, 14 பவுண்டரி), பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஜோ ரூட் (4 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் அலி, முகமது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.