கிரிக்கெட்

ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை + "||" + Here’s why ICC disallowed Pakistan from using Apple smartwatches during Lord’s Test

ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை

ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைக்கடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். #ICC


கிரிக்கெட் மைதானத்துக்குள் கைப்பேசி, வாக்கி டாக்கி, உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இந்த முறை, சர்வதேச போட்டிகள் முதல் ஐ.பி.எல் தொடரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் கைக்கடிகாரத்தை கட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த கைக்கடிகாரத்தின் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள், ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இது குறித்து கூறுகையில், ‘ஊழல் தடுப்பு அதிகாரிகள், கைக்கடிகாரம் அணியக் கூடாது என்று கூறினார்கள். இதனால் இனி மைதானத்துக்குள் அணிய மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.
2. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
3. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ
தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
5. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.