கிரிக்கெட்

டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார் + "||" + For Tony We will win the IPL trophy Raina says

டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார்

டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார்
வீரர்களை அரவணைத்து நன்கு பழகக்கூடிய ஒரு வீரர் டோனி. அவருக்காக இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல விரும்புகிறோம்.

மும்பை, 

ஐ.பி.எல். இறுதிப்போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இணையதளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியை எட்டிய போது எங்களது கேப்டன் டோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சென்னை அணி மீது அதிக அக்கறை செலுத்தி, கவனமுடன் செயல்படுகிறார். 2008–ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறார். வீரர்களை அரவணைத்து நன்கு பழகக்கூடிய ஒரு வீரர் டோனி. அவருக்காக இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல விரும்புகிறோம். டோனி மீது அடிக்கடி விமர்சனங்கள் எழுவது உண்டு. அப்போதெல்லாம் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லி இருக்கிறார். சில சமயம் உணர்வுபூர்வமான பக்கத்தில் இருந்து என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம் அவருக்காக இந்த முறை கோப்பையை வெல்வோம்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.