கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:பாகிஸ்தான் 350 ரன்கள் குவிப்பு + "||" + Test against England: Pakistan reach 350 runs

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:பாகிஸ்தான் 350 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:பாகிஸ்தான் 350 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

லண்டன், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதில் முன்னிலை பெற்றனர். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்து 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அசார் அலி (50 ரன்), ஆசாத் ஷபிக் (59 ரன்), பாபர் அசாம் (68 ரன்), ஷதப் கான் (52 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.