கிரிக்கெட்

20 ஓவர் போட்டி: உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான்- சச்சின் தெண்டுல்கர் + "||" + I wouldn’t hesitate in saying he is the best spinner in the world in this format-Sachin Tendulkar

20 ஓவர் போட்டி: உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான்- சச்சின் தெண்டுல்கர்

20 ஓவர் போட்டி: உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான்- சச்சின் தெண்டுல்கர்
20 ஓவர் போட்டிகளில் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான் என சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார். #SachinTendulkar
மும்பை:

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.

ஐபிஎல் நேற்றைய போட்டியில் ரஷித்கான் என்ற ஒற்றை வீரரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

இந்த நிலையில் ரஷித்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

19 வயதான ரஷித்கான் சிறந்த சுழற்பந்து வீரர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் அவர் தான் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது கவனித்து கொள்ளவும். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.