பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தோல்வி


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தோல்வி
x
தினத்தந்தி 27 May 2018 9:00 PM GMT (Updated: 27 May 2018 8:10 PM GMT)

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 24–ந்தேதி தொடங்கியது.

லண்டன், 

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 24–ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 184 ரன்களும், பாகிஸ்தான் 363 ரன்களும் எடுத்தன. 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு 7 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் தாரைவார்த்து 242 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 67 ரன்களும், டோமினிக் பெஸ் 57 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் இங்கிலாந்து நிர்ணயித்த 64 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் போட்டி லீட்சில் வருகிற 1–ந்தேதி தொடங்குகிறது.


Next Story