கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு + "||" + Test cricket against India: Afghanistan squad announcement

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகாரம் அளித்த பிறகு, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. கவுண்டி போட்டியில் விளையாட இருப்பதால் கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியின் போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கவுண்டி போட்டியில் விராட்கோலி ஆடுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஷ்கர் ஸ்டானிக்ஜாய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாஹிர்கான், அமிர் ஹம்சா ஆகியோர் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். 19 வயதான ஜாஹிர்கான், 18 வயதான வாபாதர் ஆகியோர் புதுமுக வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவுடன் மோதும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

ஆஷ்கர் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), முகமது ஷாஷ்ஜத், ஜாவித் அஹ்மத், ராக்மாத் ஷா, இஷானுல்லா, நசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷகிடி, அப்சர் ஜாஜாய், முகமது நபி, ரஷித் கான், ஜாஹிர்கான், அமிர் ஹம்சா, சையது ஷிர்ஜாத், யாமின் அஹ்மத்ஜாய், வாபாதர், முஜீப் ரகுமான்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடுகையில் வலது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது காயத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

விருத்திமான் சஹாவின் காயம் குறிப்பிட்ட காலத்துக்குள் குணமடையவில்லை என்றால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்தீவ் பட்டேலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், எம்.விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண்நாயர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஷர்துல் தாகூர்.


தொடர்புடைய செய்திகள்

1. 2019 தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன் - இம்ரான் கான்
2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் இனி இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவேன் என இம்ரான் கான் கூறியுள்ளார்.
2. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.
3. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.
5. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான, 4-வது ஒரு நாள் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.