கிரிக்கெட்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கர் தேர்வு + "||" + Vijay Sankar selected for the Sapakak Super Gillies

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கர் தேர்வு

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கர் தேர்வு
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கரும், காரைக்குடி அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், தூத்துக்குடி அணிக்கு வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை, 

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கரும், காரைக்குடி அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், தூத்துக்குடி அணிக்கு வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலாவது சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டில் (2017) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

3-வது தமிழ்நாடு சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

3-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவரும், செயற்குழு உறுப்பினருமான என்.சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் எல்லா அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் அணிக்கான வீரர்களை தங்களுக்கான ஒதுக்கீடு வாய்ப்பு வருகையில் தேர்வு செய்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரர் விஜய் சங்கரை முதல் வீரராக தேர்வு செய்தது. முதல் வீரராக தூத்துக்குடி அணி வாஷிங்டன் சுந்தரையும், கோவை அணி அந்தோணி தாசையும், மதுரை அணி சி.வி. வருணையும், திருச்சி வாரியர்ஸ் அணி எம்.எஸ் சஞ்சய்யையும், காஞ்சி வீரன்ஸ் அணி லோகேஷ்வரையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சதுர்வேத்தையும், காரைக்குடி காளை அணி தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்தன. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தலா 3 வீரர்களை தக்க வைத்து இருந்தது.

கடைசி சுற்று முடிவில் ஒவ்வொரு அணிகளும் தேர்வு செய்த வீரர்கள் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: விஜய்சங்கர், கோபிநாத், எம்.அஸ்வின், ஹரீஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்சன். தக்க வைத்த வீரர்கள்: அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்: வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி, சாய் கிஷோர், ஆர்.சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், அக்‌ஷய் வி.சீனிவாசன், மலோலன் ரங்கராஜன், அஷித் ராஜூ சங்க நாகல், சுஷில், தினேஷ், அபிஷேக், வெங்கடேஷ், நிதிஷ் எஸ்.ராஜகோபால், ஜேசுராஜ், பூபாலன், சுபம் மேத்தா. தக்க வைத்த வீரர்கள்: ஆனந்த் சுப்பிரமணியன், ஆகாஷ் சும்ரா, கணேசமூர்த்தி.

கோவை கிங்ஸ்: அந்தோணி தாஸ், நடராஜன், அபினவ் முகுந்த், விக்னேஷ், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், சுரேஷ்குமார், மிதுன், சுரேஷ்பாபு, சுமந்த் ஜெயின், ராஜேஷ், அஸ்வின் வெங்கட்ராமன், ராஜா, சத்ய நாராயணன், முகமது அத்னன்கான், மணிகண்டன். தக்க வைத்த வீரர்கள்: அஜித் ராம், பிரதோஷ் ரஞ்சன் பால், ரோகித்.

மதுரை பேந்தர்ஸ்: வருண், அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, தலைவன் சற்குணம், கவுசிக், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், நிலேஷ் சுப்பிரமணியன், ரோகித், நாதன், திஷார் ரஹேஜா, கிரண் ஆகாஷ், லோகேஷ் ராஜ், சபின் சோமாதா கர்ணாவர், விக்ரம் ஜாங்கிட், பிரமோத், சிவராமகிருஷ்ணன். தக்க வைத்த வீரர்கள்: அருண் கார்த்திக், கார்த்திகேயன், ஷிஜித் சந்திரன்.

திருச்சி வாரியர்ஸ்: சஞ்சய், சோனு யாதவ், விஜய், கணபதி சந்திரசேகர், எஸ். சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ். தக்க வைத்த வீரர்கள்: பாரத் சங்கர், பாபா இந்திரஜித், கே.விக்னேஷ்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாத்ரி. தக்க வைத்த வீரர்கள்: ஆர்.விவேக், என்.ஜெகதீசன், ஆர்.அஸ்வின்.

காஞ்சி வீரன்ஸ்: லோகேஷ்வர், கே.விஷால் வைத்யா, ஆர்.ஆஷிக் ஸ்ரீனிவாஸ், வி.சுப்பிரமணிய சிவா, முகிலேஷ், சுனில் சாம், எஸ்.அருண், தீபன் லிங்கேஷ், எஸ்.சித்தார்த், பிரான்சிஸ் ரோகின்ஸ், ஆர்.திவாகர், மோஹித் ஹரிகரன், எஸ்.சந்திரசேகர், எஸ்.அஸ்வத், யூ.விஷால், சி.ஸ்ரீராம். தக்க வைத்த வீரர்கள்: பாபா அபராஜித், ஆர்.சிலம்பரசன், சஞ்சய் யாதவ்.

காரைக்குடி காளை: தினேஷ் கார்த்திக், எஸ்.அனிருதா, யோமகேஷ், ஆர்.கவின், சூர்யபிரகாஷ், லட்சுமண், ஆதித்யா, கிஷன்குமார். எஸ்.ராதாகிருஷ்ணன், மான்கே பாப்னா, அஷ்வத் முகுந்தன், எஸ்.சுவாமிநாதன், டி.அஜித் குமார், எஸ்.கணேஷ், ஆர்.சீனிவாசன், பி.முருகேஷ். தக்க வைத்த வீரர்கள். மோகன் பிரசாத், ஆர்.ராஜ்குமார், ஷாஜகான்.

ஆர்.அஸ்வின் அதிக ஆட்டங்களில் ஆடமாட்டார்

வீரர்கள் தேர்வுக்கு பிறகு காரைக்குடி காளை அணி நிர்வாகி ரிஷிகேஷ் ஸ்ரீராம் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியின் பயிற்சியாளராக பத்ரிநாத் இருப்பார். தினேஷ் கார்த்திக் இல்லாத ஆட்டங்களில் அனிருதா கேப்டன் பொறுப்பை கவனிப்பார்’ என்றார்.

தூத்துக்குடி அணியில் இடம் பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் பேசுகையில் ‘சர்வதேச போட்டி காரணமாக முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாட முடியாது. எஞ்சிய போட்டி தொடர் முழுவதும் விளையாடுவேன்’ என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில், ‘தேசிய அணிக்காக ஆடுவதால் ஆர்.அஸ்வின் முதல் சில போட்டிகளில் மட்டுமே ஆடுவார். அதன் பிறகு அவரால் விளையாட முடியாது. அவர் இல்லாத நேரங்களில் ஜெகதீசன் அணியின் கேப்டனாக இருப்பார்’ என்றார்.