கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + Against Pakistan 2nd Test: England squad Innings wins

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது.

ஹெட்டிங்லே,

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 1–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 174 ரன்னில் அடங்கியதை அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 363 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்களுடன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம் உல்–ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூத்தின் 33 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை - ராணுவ தளபதி உறுதி செய்து உத்தரவு
பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையை ராணுவ தளபதி உறுதி செய்தார்.
2. இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்ணுக்கு 4 ஆண்டு ஜெயில் : புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி
இங்கிலாந்து நாட்டில் உள்ள லாக்பாரோக் நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் மிஸ்திரி (வயது 36). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2013–ம் ஆண்டு அப்போதைய அவரது கணவர் விஜய் கடெச்சியாவிடம் தனக்கு மூளை புற்றுநோய் இருப்பதாக கூறினர்.
3. பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் நடத்திய தாக்குதலில் படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
4. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
5. உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.