கிரிக்கெட்

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: மலேசியாவை 27 ரன்னில் சுருட்டி இந்தியா இமாலய வெற்றி + "||" + Asian Cup Women's 20 Over Cricket: India Himalayan success

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: மலேசியாவை 27 ரன்னில் சுருட்டி இந்தியா இமாலய வெற்றி

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: மலேசியாவை 27 ரன்னில் சுருட்டி இந்தியா இமாலய வெற்றி
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி மலேசியாவை 27 ரன்களில் சுருட்டி இமாலய வெற்றி பெற்றது.

கோலாலம்பூர்,

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி மலேசியாவை 27 ரன்களில் சுருட்டி இமாலய வெற்றி பெற்றது.

மிதாலிராஜ் 97 ரன்

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 10–ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முதல் நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, குட்டி அணியான மலேசியாவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை மிதாலிராஜ் 97 ரன்கள் (69 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். கடைசி 2 ஓவர்களில் சதத்திற்கு 8 ரன் தேவைப்பட்ட நிலையில், இறுதி கட்டத்தில் மிதாலிராஜியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவிப்போனது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32 ரன்கள் எடுத்தார்.

மலேசியா சுருண்டது

அடுத்து களம் இறங்கிய மலேசியா 13.4 ஓவர்களில் வெறும் 27 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. மலேசிய அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 6 பேர் டக்–அவுட் ஆனார்கள். இந்திய தரப்பில் மிதவேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் 2 ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டை சாய்த்தார். மிதாலிராஜ் ஆட்டநாயகியாக தேர்வானார்.

மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்தையும், இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

இந்திய அணி தனது 2–வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.