கிரிக்கெட்

இலங்கை–வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் + "||" + Sri Lanka-West Indies crash The first Test cricket starts today

இலங்கை–வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இலங்கை–வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இலங்கை–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்த ஆண்டில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இலங்கை அணி இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த குறையை போக்க இலங்கை அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.