கிரிக்கெட்

டெல்லி அருங்காட்சியகத்தில் விரைவில் விராட் கோலியின் மெழுகு சிலை + "||" + Wax statue of Indian cricket team captain ViratKohli to be unveiled shortly at Madame Tussauds,

டெல்லி அருங்காட்சியகத்தில் விரைவில் விராட் கோலியின் மெழுகு சிலை

டெல்லி அருங்காட்சியகத்தில் விரைவில்  விராட் கோலியின் மெழுகு சிலை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸில் திறக்கப்படுகிறது.
புதுடெல்லி: 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்படும். டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. 

இங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருக்கிறார். இதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.