கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா + "||" + Australian Cricket Board Executive Officer Sutherland resigned

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார். 

இது குறித்து ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பதவியில் இருந்துள்ளேன். பதவியில் இருந்து விலக இது சரியான தருணம் என்று கருதுகிறேன். நான் பதவி விலகுவதற்கு சவுகரியமான நேரமாக இதனை நினைக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இது நல்ல நேரமாகும். கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் வீரர்கள் ஒப்பந்தம் உள்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய தலைமை செயல் அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க இது சரியான நேரமாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கும், எனது விலகல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று தெரிவித்தார். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை ஜேம்ஸ் சுதர்லாண்ட் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி
புதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.
2. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
4. உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டர்சி ஷார்ட் 257 ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
5. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இஷாந்த் ‌ஷர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி சோதனை
இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு பெங்களூருவில் நாளை உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது.