கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா + "||" + New Zealand cricket team coach Sudden resignation

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்த மைக் ஹெஸ்சன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென நேற்று அறிவித்தார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வந்த மைக் ஹெஸ்சன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென நேற்று அறிவித்தார். 43 வயதான அவர் அடுத்த மாதம் (ஜூலை) 31–ந் தேதியுடன் பணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மைக் ஹெஸ்சன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

இது தொடர்பாக மைக் ஹெஸ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பயிற்சியாளர் பதவியில் 100 சதவீத அர்ப்பணிப்புடன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியது அவசியமானதாகும். எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதால் அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் இருக்க நான் விரும்பவில்லை. அடுத்த 12 மாதத்துக்கு அணிக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். அதற்கு நான் தகுதியானவர் இல்லை என்று கருதுவதால் விலகல் முடிவை எடுத்தேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் விலகல் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி டேவிட் ஒயிட்டிடம் கருத்து கேட்ட போது, ‘அடுத்த 12 மாதத்துக்கு பயிற்சியாளர் பதவியில் தொடருமாறு விடுத்த வேண்டுகோளை மைக் ஹெஸ்சன் ஏற்க மறுத்து விட்டார். எனவே புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்து வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் போட்டி தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது. மைக் ஹெஸ்சன் பயிற்சியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் 20 ஓவர் போட்டி தரவரிசையில் அந்த அணி நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. என்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை அது பற்றி பேசி பயனில்லை - வீராட் கோலி
என்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனும் போது அது குறித்து நான் பேச விரும்பவில்லை என வீராட் கோலி கூறினார்.
2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், யாசிர் ஷா
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 4–வது முறையாக ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பந்தாடியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடி மகுடம் சூடியது.
4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டு இந்தியா வெளியேறியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? அரைஇறுதியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.