கிரிக்கெட்

U-19 அணியில் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை + "||" + rahul dravid will be not travelling with u 19 indian cricket team

U-19 அணியில் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை

U-19 அணியில்  சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை
19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் அணியில் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு சச்சின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், அர்ஜூனுக்கு இந்த தொடரில் பயிற்சியளிக்க முடியாமல் போய்விட்டது.

அடுத்த மாதம் இந்திய ஜூனியர் அணி இலங்கைக்கு செல்கிறது. 4 நாட்கள் நடைபெறும் போட்டிகள் 2 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய ஜூனியர் அணியும் இலங்கை ஜூனியர் அணியும் மோதுகின்றன.

அதே சமயத்தில் இந்திய “ஏ” அணி இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு தொடரில் ஆடுவதால், அந்த அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் செல்ல உள்ளார். அதனால் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

டிராவிட்டுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டபிள்யூ வி ராமன், இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அதனால் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை உள்ளது.

எனினும் இந்திய ஜூனியர் அணியில் சச்சின் மகன் இடம்பெற்றுவிட்டதால், அடுத்தடுத்த தொடர்களில் டிராவிட் பயிற்சியளிப்பார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்
இந்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் கூறி உள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
3. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.
5. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.