வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 9 Jun 2018 9:00 PM GMT (Updated: 9 Jun 2018 8:28 PM GMT)

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது.

போர்ட் ஆப்–ஸ்பெயின், 

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 185 ரன்னில் சுருண்டது. அடுத்து 229 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3–வது நாள் நிறைவில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக கீரன் பவெல் 88 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இலங்கை அணி 2–வது இன்னிங்சை ஆடியது.


Next Story