கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் + "||" + Women's Asian Cup T20: Bangladesh team trophy to beat India

பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன்

பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன்
பெண்கள் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. #IndVsBan
கோலாலம்பூர்,

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

6 அணிகள் இடையிலான 7-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலில் 'பேட்' செய்த மிதாலி ராஜ் (11), மந்தனா (7), தீப்தி சர்மா (4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56(42) ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை தந்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது.

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில், அயாஷா ரஹ்மான் (17), ஷமிமா சுல்தானா (16) ரன்கள் எடுத்தனர். நிகார் சுல்தானா (27) ரன்களும், ருமானா அஹமது (23) ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் வங்கதேச அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேச அணி முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது. இதன்மூலம் தொடர்ந்து 6 முறை கோப்பை வென்றிருந்த இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 292 ரன்னில் ஆல்-அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி ஜடேஜா, விஹாரியின் அரைசதத்தின் உதவியுடன் சரிவில் இருந்து மீண்டு 292 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
2. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்
இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார்.
3. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று துவங்க உள்ளது.
4. வெற்றிபெறுமா இந்திய அணி? - வெற்றிக்கு 84 ரன்கள் தேவை
இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தினை வெளிபடுத்தி வருகிறது. #INDVsENG
5. மோசமான போட்டி அட்டவணை: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்க கூடாது - ஷேவாக் வலியுறுத்தல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதால் அதில் இந்திய அணி பங்கேற்க கூடாது என்று முன்னாள் வீரர் ஷேவாக் கூறியுள்ளார்.