கிரிக்கெட்

ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி + "||" + Scotland team England The shock failed

ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி

ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது.
ங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடியது. ரன் மழை பொழிந்த அந்த அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மெக்லியோட் 140 ரன்கள் விளாசி (94 பந்து, 16 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. அந்த அணி இங்கிலாந்தை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 105 ரன்கள் (59 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். பேர்ஸ்டோ, ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக நொறுக்கிய 3-வது சதம் இதுவாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் இவர் தான்.