கிரிக்கெட்

இங்கிலாந்து பயணத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம் + "||" + Sanju Samson dismissed from Indian 'A' team for England tour

இங்கிலாந்து பயணத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்

இங்கிலாந்து பயணத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்
உடல் தகுதி தேர்வில் தோற்றதால் இந்திய ‘ஏ’ அணியில் இருந்து சஞ்சு சாம்சனின் வாய்ப்பு பறிபோனது.
மும்பை,

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் நேற்று முன்தினம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. இந்த போட்டி தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த 23 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அணியினருடன் செல்லவில்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.


சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உடல் தகுதி தேர்வில் (யோ-யோ) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுகிறார்கள். உடல் தகுதி தேர்வுக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் 16.1 புள்ளிகளுக்கு குறைவாக பெறும் எந்தவொரு வீரருக்கும் அணியில் இடம் கொடுக்கப்படுவதில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட உடல் தகுதி சோதனையில் சஞ்சு சாம்சன் தேறாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி
பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு 2-ம் கட்டமாக விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி.
2. கடலில் வீணாக கலக்கும் 150 டி.எம்.சி. தண்ணீர்: நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது
கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும், தமிழக அரசு நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
3. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் செரீனா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
4. மணவாளக்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. 2-1 கோல் கணக்கில் நைஜீரியாவை சாய்த்து: அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது அர்ஜென்டினா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.