பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை


பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 8:00 PM GMT)

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் 232 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.

டப்ளின்,

நியூசிலாந்து- அயர்லாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வீராங்கனை 17 வயதான அமெலியா கெர் 232 ரன்கள் (145 பந்து, 31 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி இரட்டை சதம் நொறுக்கிய 2-வது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

அத்துடன் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் 1997-ம் ஆண்டு டென்மார்க்குக்கு எதிராக 229 ரன்கள் எடுத்ததே தனிநபர் அதிகபட்சமாக நீடித்தது. அவரது 21 ஆண்டு கால சாதனைக்கு அமெலியா கெர் முடிவு கட்டினார்.

Next Story