கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி + "||" + First ODI against Australia: England win

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47 ஓவர்களில் 214 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்னும், ஆஷ்டன் அகர் 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி, பிளங்கெட் தலா 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் இயான் மோர்கன் 69 ரன்னும், ஜோரூட் 50 ரன்னும், டேவிட் வில்லி ஆட்டம் இழக்காமல் 35 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டான்லெக், மைக்கேல் நேசெர், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நாளை நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்
ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும் என்று புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம்
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. அதில் முகமது ஹபீஸ் சதம் அடித்தார்.
4. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
5. ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவி தப்பியது
ஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் நடந்த திடீர் ஓட்டெடுப்பில், உள்துறை மந்திரியை வீழ்த்தி பிரதமர் மால்கம் டர்ன்புல் தன் பதவியை தக்க வைத்தார்.