மாவட்ட செய்திகள்

மதுரையில் வீட்டில் குண்டு வெடிப்பு: காயம் அடைந்த ரவுடி சாவு + "||" + Blast at home in Madurai: Wounded Rowdy death

மதுரையில் வீட்டில் குண்டு வெடிப்பு: காயம் அடைந்த ரவுடி சாவு

மதுரையில் வீட்டில் குண்டு வெடிப்பு: காயம் அடைந்த ரவுடி சாவு
மதுரையில் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயம் அடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுரை,

மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது 42). இவரது வீட்டில் கடந்த 10-ந் தேதி திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் உள்ளே முனுசாமியும், திருத்தங்கலை சேர்ந்த நரசிம்மன் (38) என்பவரும் பலத்த காயங்களுடன் கிடந்தனர். வீட்டின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. இது குறித்து கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

மேலும் வீட்டில் இருந்து 11 நாட்டு வெடிகுண்டுகளும், குண்டுகள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நரசிம்மன் நேற்று மதியம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

ரவுடியான இவர் மீது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

முனுசாமி 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.