இங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை


இங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை
x
தினத்தந்தி 15 Jun 2018 3:20 AM GMT (Updated: 15 Jun 2018 3:20 AM GMT)

இங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா முதல் முறையாக பங்கேற்கவுள்ளார். #KiaSuperLeauge #SmritiMandhana

புதுடெல்லி,

இங்கிலாந்தில் கோடைக்காலத்தில் தொடங்கும் கியா சூப்பர் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி பங்கேற்க பிசிசிஐ சமீபத்தில் அனுமதி அளித்தது. 

இதையடுத்து இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ம்ரிதி மந்தனா பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் கியா சூப்பர் லீக் போட்டியில் மந்தனா வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணிக்காக விளையாடவுள்ளார். 

21 வயதாகும் மந்தனா இதுவரை 40 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 826 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள மந்தனா, மகளிருக்கான ஐபிஎல் போட்டியில் டிரைல்ப்ளேசெர்ஸ் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். 

போட்டியில் பங்கேற்பது குறித்து மந்தனா பேசுகையில், ”கியா சூப்பர் லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்பது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியின் வெற்றிக்கு நான் உதவியாக இருப்பேன்” எனக் கூறினார்.

Next Story