ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு
x
தினத்தந்தி 18 Jun 2018 8:45 PM GMT (Updated: 18 Jun 2018 7:26 PM GMT)

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

துபாய், 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான தரவரிசை இதுவாகும். கடைசியாக 1984-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய அணி 6-வது இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 15 ஒருநாள் போட்டிகளில் 13 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால் இந்த சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் மீண்டும் 5-வது இடத்தை பிடிக்க முடியும்.

ஒருநாள் போட்டி தரவரிசையில் இங்கிலாந்து அணி (124 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (122 புள்ளிகள்) 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி (113 புள்ளிகள்) 3-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (112 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (102 புள்ளிகள்) 6-வது இடத்திலும், வங்காளதேச அணி (93 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இலங்கை அணி (77 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (69 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி (63 புள்ளிகள்) 10-வது இடத்திலும் உள்ளன.

Next Story