கிரிக்கெட்

டி.என்.பி.எல் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி தொடக்கம் + "||" + TNPL 3rd Season  Starting July 11

டி.என்.பி.எல் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி தொடக்கம்

டி.என்.பி.எல் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி தொடக்கம்
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.
சென்னை

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. 


திருநெல்வேலி,  திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 14 போட்டிகளும் , சென்னையில் நான்கு போட்டிகளும் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசாக ஒரு கோடி ரூபாயும், இரண்டாவதாக வரும் அணிக்கு பரிசாக ரூபாய் 60 லட்சமும் , மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 40 லட்சமும் பரிசாக  வழங்கப்படுகிறது . 


இந்த போட்டி தொடர்பாக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய வீரர் அபினவ் முகுந்த், தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.