பயிற்சி போட்டியில் அசத்திய இந்திய ஏ அணி வீரர்கள்


பயிற்சி போட்டியில் அசத்திய இந்திய ஏ அணி வீரர்கள்
x
தினத்தந்தி 21 Jun 2018 9:13 AM GMT (Updated: 21 Jun 2018 9:13 AM GMT)

இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகியோரின் அதிரடியில் இந்திய ஏ அணி, பயிற்சி போட்டி ஒன்றில் 458 ரன்களை குவித்து மிரட்டியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி  இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ளது.  அங்கு  முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா “ஏ”, வெஸ்ட் இண்டீஸ் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு  போட்டி நடக்கிறது.

முன்னதாக  பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் ஆடிய முதல் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து லைசெஷ்டெர்ஷைர் அணியுடனான மற்றொரு பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வாலின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடிய இருவருமே சதமடித்தனர். முதல் விக்கெட்டே 221 ரன்களில் தான் வீழ்ந்தது. 132 ரன்களில் பிரித்வி ஷா அவுட்டானார்.

மயன்க் அகர்வால் 151 ரன்களில் காயம் காரணமாக பெவிலியின் திரும்பினார். இரண்டாவது வரிசையில் களமிறங்கிய ஷுப்மன் கில், தன் பங்கிற்கு 86 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். பிரித்வி ஷா, அகர்வாலின் அபார சதங்கள் மற்றும் ஷுப்மன் கில்லின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய  அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 458 ரன்களை குவித்தது.

459 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லைசெஷ்டெர்ஷைர் அணியின் எந்த வீரரும் சோபிக்கவில்லை. டாம் வெல்ஸ் மட்டும் 62 ரன்கள் அடித்தார். அந்த அணி 40.4 ஓவருக்கே 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 281 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது.


Next Story