கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து சன்டிமால் அப்பீல் + "||" + The ball that hit the ball Sandemal Appeal against the ban

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து சன்டிமால் அப்பீல்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து சன்டிமால் அப்பீல்
இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்தது.

செயின்ட்லூசியா, 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்தது. இந்த நிலையில் தடையை எதிர்த்து சன்டிமால் அப்பீல் செய்துள்ளார்.

ஒரு இனிப்பு பொருளை வாயில் போட்டு மென்று, பிறகு எச்சிலை வைத்து பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்றினார் என்பது தான் சன்டிமால் மீதான குற்றச்சாட்டு. ஆனால் வீடியோ ஆதாரத்தில் அவர் எந்த மாதிரியான இனிப்பை வாயில் போட்டு சுவைத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவரும், அது தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிவிட்டார். இந்த வி‌ஷயத்தை அடிப்படையாக வைத்து சன்டிமால் தரப்பில் வாதிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது குறித்து விசாரிக்க ஐ.சி.சி. தனி கமி‌ஷனரை நியமிக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நாளை தொடங்கும் 3–வது டெஸ்டில் சன்டிமால் ஆடுவதற்கு வாய்ப்பில்லை.


ஆசிரியரின் தேர்வுகள்...