இங்கிலாந்துக்கு எதிரான 4–வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான 4–வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி
x
தினத்தந்தி 22 Jun 2018 9:00 PM GMT (Updated: 23 Jun 2018 12:57 AM GMT)

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஸ்டர்–லீ–ஸ்டிரிட்டில் நேற்று முன்தினம் நடந்தது.

செஸ்டர்–லீ–ஸ்டிரிட், 

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஸ்டர்–லீ–ஸ்டிரிட்டில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆரோன்பிஞ்ச் (100 ரன்), ஷான் மார்ஷ் (101 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். ஜாசன் ராய் 101 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 79 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 54 ரன்களும் விளாசினர். இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 9 ஒரு நாள் போட்டிகளில் 8–ல் மண்ணை கவ்வியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் உண்மையிலேயே அபாரமாக ஆடினர். ஆனால் கடைசி 10 ஓவர்களில் பேட்டிங் சரியில்லை. 30 முதல் 40 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ என்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 4–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.


Next Story