கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி தொடரை முழுமையாக கைப்பற்றியது + "||" + Against Australia The last one day match England win series

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி தொடரை முழுமையாக கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி தொடரை முழுமையாக கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

மான்செஸ்டர், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

ஒரு நாள் கிரிக்கெட்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்று முனைப்புடன் அதிரடி காட்டினர். ஆனால் அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை தக்கவைக்க தவறினர். 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 205 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. முந்தைய ஆட்டங்களில் ரன்வேட்டை நடத்திய இங்கிலாந்தும் திணறியது. ஒரு கட்டத்தில் 114 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

பட்லர் சதத்தால் வெற்றி

இந்த சூழலில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், அடில் ரஷித்துடன் இணைந்து படிப்படியாக அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இந்த ஜோடி 9–வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் திரட்டியது. அடில் ரஷித் 20 ரன்களில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் கடைசி விக்கெட்டுக்கு வந்த ஜாக் பாலின் (1 ரன்) துணையுடன் பட்லர் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.

இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6–வது சதத்தை பூர்த்தி செய்த ஜோஸ் பட்லர் 110 ரன்களுடன் (122 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

5–0 என்ற கணக்கில்...

வெற்றியின் மூலம் இந்த தொடரை 5–0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாக வசப்படுத்தி அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி கண்டு எதிரணியை ‘ஒயிட்வாஷ்’ செய்வது இது 2–வது முறையாகும். ஏற்கனவே 2001–ம் ஆண்டு ஜிம்பாப்வேயை இவ்வாறு தோற்கடித்து இருக்கிறது.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஆட்டங்களில் மோதியுள்ள இங்கிலாந்து அதில் 9–ல் வெற்றி கண்டுள்ளது. ஒரு சீசனில் குறிப்பிட்ட அணியை அதிக முறை வீழ்த்திய நிகழ்வாக இங்கிலாந்துக்கு இது அமைந்தது.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
2. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி
‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.
4. கடைசி டெஸ்ட் போட்டி: டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது - இந்திய வீரர் ஹனுமா விஹாரி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பு டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது என இந்திய வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
5. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. #INDVsENG