கிரிக்கெட்

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மோசமான தோல்வி எதிரொலி: ஐ.சி.சி தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணி + "||" + ODI rankings: Aussies finish at sixth spot post series whitewash

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மோசமான தோல்வி எதிரொலி: ஐ.சி.சி தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணி

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மோசமான தோல்வி எதிரொலி: ஐ.சி.சி தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணி
இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் மோசமான தோல்வி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #ICCODIRankings
துபாய்,

கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஐ.சி.சி ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் குறைந்து 100 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வங்காளதேச அணி 7-வது இடத்திலும் புள்ளிகள் அடிப்படையில் இடம் பெற்றுள்ளன. இதனிடையே ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி தோல்வியுற்ற போதிலும், ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்ததால் 3 புள்ளிகள் (126) அதிகரித்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடம் வகிக்கிறது.

இதனிடையே ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணி, கடந்த முப்பது ஆண்டுகளில் இது போல் ஒரு மோசமான நிலையை சந்தித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.