கிரிக்கெட்

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு + "||" + England are at the top of the One Day International cricket rankings

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு

ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
துபாய்,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-5 என்ற கணக்கில் பறிகொடுத்து ‘ஒயிட்வாஷ்’ ஆன ஆஸ்திரேலியா தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. தொடருக்கு முன்பாக 104 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் புள்ளி எண்ணிக்கை இப்போது 100 ஆக குறைந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மோசமான தரநிலை இதுவாகும்.


ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் 2 புள்ளிகளை இழந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை பந்தாடியதன் மூலம் 3 புள்ளிகள் சேகரித்து மொத்தம் 126 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் தொடருகிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.

அடுத்த மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. முதலிடத்தை தக்கவைக்க இந்த தொடரில் இங்கிலாந்து குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக, தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தினால், இந்தியா மீண்டும் முதலிட அரியணையில் ஏறும்.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை வருமாறு:-

1. இங்கிலாந்து (126 புள்ளி), 2. இந்தியா (122 புள்ளி), 3. தென்ஆப்பிரிக்கா (113 புள்ளி), 4. நியூசிலாந்து (112 புள்ளி), 5. பாகிஸ்தான் (102 புள்ளி), 6. ஆஸ்திரேலியா(100 புள்ளி), 7.வங்காளதேசம் (93 புள்ளி), 8.இலங்கை (77 புள்ளி), 9.வெஸ்ட் இண்டீஸ் (69 புள்ளி), 10. ஆப்கானிஸ்தான்(63 புள்ளி).