கிரிக்கெட்

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு + "||" + Sri Lanka-West Indies Test Cricket: 20 wickets in a single day

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்தது.
பிரிட்ஜ்டவுன்,

இலங்கை - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 204 ரன்னில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 154 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதையடுத்து 50 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 31.2 ஓவர்களில் வெறும் 93 ரன்களில் சுருண்டது. இலங்கை தரப்பில் லக்மல், கசுன் ரஜிதா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 144 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 63 ரன்கள் தேவையாகும்.

3-வது நாள் ஆட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 20 விக்கெட்டுகள் சரிந்தன. வெஸ்ட்இண்டீசில் நடக்கும் டெஸ்ட் ஒன்றில் ஒரே நாளில் விழுந்த அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை இது தான்.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
2. 6 மாதங்களில் 2-வது முறையாக இந்தியா வருகிறார், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே
6 மாதங்களில் 2-வது முறையாக இலங்கை எதிர்கட்சித்தலைவர் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளார்.
3. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
4. இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது
இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட்: பவுன்சர் பந்து தாக்கியதில் நிலைகுலைந்த கருணரத்னே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இலங்கை வீரர் கருணரத்னே நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...